• Sat. Oct 10th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ முனியாண்டி ஸ்ரீ மண்டு கருப்பு ஸ்ரீ அம்மச்சி அம்மன் கோவில் திருவிழா..,

ByKalamegam Viswanathan

May 23, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ சந்தன மாரியம்மன் ஸ்ரீ முனியாண்டி ஸ்ரீ மண்டு கருப்பு ஸ்ரீ அம்மச்சி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

காலை திருக்கோவிலில் இருந்து கிளம்பி கருப்பட்டி கிராமத்தில் பல்வேறு பகுதிகளில் ஊர்வலமாக சென்றனர் மேளதாளம் முழங்க கும்மி பாட்டு பாடி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். முன்னதாக கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து முளைப்பாரிகளை வைகை ஆற்றில் கொண்டு சென்று கரைத்தனர்.
கருப்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராம பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் முளைப்பாரி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்