• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

தயாளு அம்மாளை நேரில் சென்று பார்த்த ஸ்டாலின் …

தயாளு அம்மாளுக்கு அப்போலோவில் 2-வது நாளாக சிகிச்சை: நேரில் சென்று ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாளுக்கு வயது மூப்பு காரணமாக திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு இன்று 2-வது நாளாகத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மருத்துவமனைக்கு நேரில் சென்ற மு.க.ஸ்டாலின், தனது தாயார் தயாளு அம்மாளைச் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவச் சிகிச்சைகள் மற்றும் தற்போதைய உடல்நிலை குறித்து அங்குள்ள மருத்துவர்களிடம் அவர் விரிவாகக் கேட்டறிந்தார்.