• Mon. Nov 16th, 2026

நகை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நிஷாந்த் வீட்டை சுற்றி 3வது நாளாக காவல்துறை பாதுகாப்பு..,

ByKalamegam Viswanathan

Nov 15, 2026

மதுரை தனிஷ்க் ஜுவல்லரி நகைக்கடையில் பல கோடி மதிப்பிலான நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் நிஷாந்தின் தோழி மீனாட்சி மற்றும் நிஷாந்தின் தந்தை சுரேஷ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்

இந்நிலையில் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கின் முக்கிய நபரான நிஷாந்தை 4 நாட்களாக காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதனிடையே நிஷாந்தின் குடும்பத்திற்கு சொந்தமான வயல்வெளியில் 2ஆவது நாளாக கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா ?/என்பது குறித்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாடக்குளம் கண்மாய் மற்றும் காட்டுப்பகுதிகளில் உள்ள மரங்கள், கிணற்று பகுதிகளில் தேடி வருகின்றனர்.

நகை கொள்ளையடிக்க பட்ட தனிக்ஸ் நகை கடையில் தனியார் பாதுகாவலர் அதிகளவிற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நிஷாந்த் நகைகளை பதுக்கி வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் திருப்பரங்குன்றம், மாடக்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் காவல்துறையினர் தேடுதல் பணியை தொடர்ந்து வருகின்றனர்

இதனிடையே நிஷாந்தின் செல்போன் அழைப்புகள் குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்