• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

அண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு..,

“திமுக ஃபைல்ஸ்” என்ற பெயரில் திமுக அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளின் சொத்து பட்டியலை கடந்த 2023 ஏப்ரல் 14ம் தேதி பாஜக அப்போதைய தலைவராக இருந்த அண்ணாமலை வெளியிட்டார்.

இதுதொடர்பாக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலைக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணையின் போது டி.ஆர்.பாலுவை நேரடியாக குறுக்கு விசாரணை செய்திருந்தார் அண்ணாமலை

இந்நிலையில், பாஜகட்சியில் இல்லாத அண்ணாமலை மீது, அவதூறு வழக்கை தொடர்ந்து நடத்த எம்.பி பாலு தரப்பில் விரும்பவில்லை என்பதால், கடந்த 15 நாட்களாக வழக்கை திரும்ப பெறுவது குறித்து, சட்ட வல்லுநர்களுடன் டி.ஆர் பாலு ஆலோசனை செய்து வந்தார்.

இதையடுத்து, சட்ட வல்லுநர்களின் ஆலோசனையின் படி, அண்ணாமலைக்கு எதிரான வழக்கு திரும்ப பெறுவதாக டி.ஆர் பாலு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.