கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காட்டை அடுத்த மணலிவிளை பகுதியை சேர்ந்தவர் பிரதீஷ்குமார். வெளிநாட்டு சரக்கு கப்பலில் பொறியாளராக பணியாற்றும் இவருக்கும், பக்கத்து ஊரை சேர்ந்த ஸ்ரீஜா ஷாமிலி என்ற பட்டதாரி பெண்ணுக்கும் கழிந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி திருமணம் நடந்துள்ளது.
திருமணத்திற்கு பின் பிரதீஷ்குமார் மணலிவிளை பகுதியில் தோப்பிற்கு நடுவே தனியாக உள்ள தனது வீட்டில் மனைவி மற்றும் தாயுடன் வசித்து வருகிறார். இந்த தம்பதியருக்கு ஆறு மாத கைக்குழந்தை இருக்கும் நிலையில் கழிந்த 5-மாதங்களுக்கு முன் வெளிநாடு சென்ற பிரதீஷ்குமார் டிசம்பர் 1-ம் தேதியான இன்று திருமண நாளை கொண்டாடும் விதத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன் சொந்த ஊர் திரும்பி உள்ளார்.

இந்த நிலையில் 3-வது திருமண நாளான இன்று நோய்வாய்பட்ட தனது தாயை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதோடு திருமண கொண்டாத்திற்கான பொருட்களையும் வாங்கி வருவதாக மனைவியிடம் கூறி தாயுடன் வெளியே சென்றுள்ளார். இந்த நிலையில் கைக்குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த ஸ்ரீஜா ஷாமிலி தனது கணவரின் தங்கை பிரதி என்பவருடன் செல்போணில் பேசிக் கொண்டிருந்த போது, வீட்டின் முன் வந்த இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் கொண்ட குழு ஸ்ரீஜா ஷாமிலியிடம் யாசகம் கேட்டுள்ளது.
ஆனால் யாசகம் தர மறுத்த அவர் செல்போணில் பேசிக் கொண்டிருந்த தனது கணவரின் தங்கையிடம் கடந்த மூன்று நாட்களாக சந்தேகத்திற்கு இடமாக யாசகம் கேட்டு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் இன்றும் யாசகம் கேட்டு வந்துள்ளதாக கூறிய நிலையில் அவர் முன் கதவை பூட்ட அறிவுறித்திய நிலையில் ஸ்ரீஜா ஷாமிலி முன்பக்க கதவை பூட்டிய நிலையில் சுதாகரித்து கொண்ட மர்ம கும்பல் பின்பக்க கதவு வழியாக உள்ளே புகுந்து ஸ்ரீஜா ஷாமிலி முகத்தில் மயக்க மருந்து பொடியை வீசியுள்ளது இதில் அரை மயக்கத்துடன் காணப்பட்ட அவரிடம் இருந்து அந்த கும்பல் தாலி சங்கிலி, வளையல், கம்மல் ஆகியவற்றை கழற்றி வாங்கியதோடு கைக்குழந்தையை எடுத்து கொன்று விடுவதாக மிரட்டி பிரோவில் இருந்த நகைகள் என 25-சவரன் சுமார் பத்து லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்து ஸ்ரீஜா ஷாமிலி மற்றும் கைக்குழந்தையை அறையில் வைத்து பூட்டி விட்டு அந்த கும்பல் தப்பி சென்றுள்ளது.
இதற்கிடையில் தனது அண்ணன் மனைவியின் செல்போண் இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டதால் அசம்பாவிதம் நடத்து விட்டதாக எண்ணிய பிரதி தனது கணவருடன் அங்கு வந்து பூட்டப்பட்டிருந்த அறை கதவை திறந்து பார்த்த போது ஸ்ரீஜா ஷாமிலி கட்டிலில் கைக்குழந்தையுடன் மயக்க நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிட்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்ததோடு மண்டைக்காடு போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் டிஎஸ்பி தங்கராமன் மற்றும் செங்கோட்டு வேலவன் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரீஜா ஷாமிலி மற்றும் அவரது கணவர் பிரதீஷ்குமாரிடம் விசாரணை நடத்தியதோடு, கொள்ளை கும்பலை பிடிக்க சப் இன்ஸ்பெக்டர் ஜாண் போஸ்கோ தலைமையில் 10-கொண்ட தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
இதுகுறித்து டிஎஸ்பி தங்கராமன் கூறுகையில் கடந்த 3-நாட்களாக சந்தேகப்படும் படியான 3-பேர் கொண்ட மர்ம கும்பல் ஸ்ரீஜா ஷாமிலியிடம் யாசம் கேட்பது போல் தனியாக இருந்த அந்த வீட்டை கண்காணித்து நோட்டமிட்டு வந்துள்ளதாகவும், சந்தேகம் எழுந்த பின்னரும் பட்டதாரி பெண் அவசர போலீஸ் எண்ணுக்கோ காவல் நிலையத்திற்கோ தகவல் கொடுக்காத நிலையில் அந்த கும்பல் கச்சிதமாக கொள்ளையை அரங்கேற்றி சென்றுள்ளதாகவும் சந்தேகப் படும்படியான தெரியாத நபர்கள் தொடர்ந்து வீட்டிற்கு வந்தால் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவ்வாறு தெரிவித்தால் இது போன்ற கொள்ளை சம்பவங்களை தவிர்க்கலாம் என்றும் சுட்டி காட்டுகின்றனர்.
கப்பல் ஊழியர் தனது மனைவி மற்றும் குடும்பத்தாருடன் 3-வது திருமண நாளை கொண்டாட இருந்த நிலையில் கொள்ளை சம்பவம் அரங்கேறி வீடே கலையிழந்த நிலையில் கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.