உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கடையநல்லூரில் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

திருநெல்வேலி ஒருங்கிணைந்த மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இன்று கடையநல்லூரில் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமையில் சுமார் 50க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பேராசிரியர் செல்லத்துரை, மாவட்ட துணைச் செயலாளர் வீரா முத்துசாமி, மன்ற ஒருங்கிணைப்பாளர் ரவி, ஊர் தலைவர் மாரி பாண்டியன், சங்கரன்கோயில் தலைவர் பாண்டியன், நகர செயலாளர் பழக்கடை ஈஸ்வரன், அவர் நகர செயலாளர் மற்றும் மன்ற நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.