• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

விக்ரம் படத்திற்கு சிறப்பு காட்சிகள் அனுமதி…

Byகாயத்ரி

Jun 3, 2022

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி முடித்திருக்கிறார். இந்நிலையில் இந்த படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியது. பட வெளியீட்டை முன்னிட்டு நள்ளிரவு முதலே ரசிகர்கள் திரையரங்குகளில் ஆரவரத்தில் ஈடுபட்டு வந்தனர். படத்தில் விஜய்சேதுபதி,பகத் பாசில், சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடிப்பில் ரசிகர்கள் ஆடிப்பாடி ஆரவாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் விக்ரம் திரைப்படத்திற்கு முதல் மூன்று நாட்கள் சிறப்பு கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இப்படத்தை தமிழ்நாடு முழுவதும் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடும் நிலையில் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.