• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல்லில் தேசிய மக்கள் நீதிமன்றம் சார்பில் சிறப்பு முகாம்..,

ByS.Ariyanayagam

Jun 13, 2026

திண்டுக்கல் தேசிய மக்கள் நீதிமன்றம் சார்பில் சிறப்பு முகாம் நடந்தது.
திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றம் நிகழ்விற்கு மாவட்ட முதன்மை நீதிபதி பத்மநாபன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.

விருதுநகரை சேர்ந்த திருப்பதி(38) என்பவர் அம்மையநாயக்கனூர் அருகே கடந்த 2025ம் சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கு சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் திருப்பதியில் குடும்பத்தினர் சார்பாக திண்டுக்கல்லை சேர்ந்த வழக்கறிஞர் F.ஆரோக்கிய அருள்தாஸ் ஆஜராகி வழக்கை நடத்தி வந்த நிலையில்
இன்று நடைபெற்றது.

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் திருப்பதியின் மனைவி முத்துலட்சுமி மற்றும் வாரிசுதாரர்களுக்கு ரூ.31 லட்சம் இழப்பீட்டை மாவட்ட முதன்மை நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் வழங்கப்பட்டது.