• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம்..,

ByKalamegam Viswanathan

Aug 4, 2026

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து மதுரை தவெக புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பரங்குன்றம் அடுத்துள்ள திருநகரியில் உள்ள திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்றது.

தமிழக வெற்றிக்கழக மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் மருதுபாண்டி தலைமையில் நடைபெற்று வருகிறது.

தமிழக விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாத தவெக அரசை கண்டித்து தஞ்சாவூரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய் குறித்தும், பெண்களைக் குறித்தும் இழிவாக பேசியதை கண்டித்து மாவட்ட வாரியாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஊரக வளர்ச்சி துறை அமைச்சரும் தவெக பொதுச்செயலாளரும், என். ஆனந்த் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் மதுரை புறநகர் மாவட்டம் சார்பில் திருநகரில் உள்ள திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் துணை மேயர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து கோஷங்களை எழுப்பினர் 100 பெண்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.