• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

அலங்காநல்லூரில் உதயநிதியை கண்டித்து கருப்பையா எம்எல்ஏ தலைமையில் மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்..,

ByKalamegam Viswanathan

Aug 4, 2026

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கேட்டு கடை பகுதியில் தஞ்சாவூரில் திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெண்களை அவதூறாக பேசிய உதயநிதி ஸ்டாலினை கண்டித்து சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா தலைமையில் மகளிர் அணியினர் மற்றும் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், ஒன்றிய நிர்வாகிகள் வழக்கறிஞர் தியாகராஜன் தாமு சரவணன்
விஜய் ஹரிஷ், கிருஷ்ணமூர்த்தி, தாமோதரன், நகர் செயலாளர் ரஞ்சித், நிர்வாகிகள் கூட்டுறவு சங்க த் தலைவர் பாலாஜி, மற்றும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர். அதனைத் தொடர்ந்து சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளிக்கப்பட்டது.