• Tue. Apr 22nd, 2025

சிட்டுக்குருவி தினம் அரசு பள்ளியில் விழிப்புணர்வு பேச்சுப்போட்டி.

சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சியும், பள்ளி மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் பேச்சுப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது.

சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு தமிழக முழுவதும் தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஆங்காங்கே நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி அரசு கள்ளர் தொடக்கப் பள்ளியில் வானவில் தொண்டு அறக்கட்டளை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தொண்டு அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் ஆஜரா தலைமை தாங்கினார். ராயப்பன்பட்டி காவல்துறை சார்பு ஆய்வாளர் கோதண்டராமன் சிறப்புரை ஆற்றினார். அன்பு அறம் செய் அறக்கட்டளை அன்பு ராஜா, சங்கமம் அறக்கட்டளை சுரேஷ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் சிட்டுக்குருவியின் முக்கியத்துவத்தை பற்றி பள்ளி மாணவிகள் பேச்சு போட்டியும் நடைபெற்றது. பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வண்ணம் சில்வர் வாட்டர் கேன்கள் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வழங்கப்பட்டது.