• Thu. Jan 22nd, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ரம்மி ஆப்புகளை தடை செய்யக்கோரி தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் கோரிக்கை

Byகுமார்

Aug 8, 2022

இணையதளத்தில் உள்ள ஆன்லைன் ரம்மி ஆப்புகளை தமிழகஅரசு தடை செய்யக்கோரி மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் இடம் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர்
மதுரையில் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவன தலைவர் திருமாறன் ஜி அறிவுறுத்தலின்படிமதுரை மாவட்ட தலைவர் மருதுஆனந்த் மற்றும் மாவட்டபொதுசெயலாளர் சுரேஷ் தலைமையில் இளைஞர் அணி தலைவர் சுரேஷ் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் பெற்றது சமீபகாலமாக இணையதளத்தில் திரைப்படம் முன்னணி பிரபலங்களை வைத்தும் மற்றும் முகம் தெரியாதவர்களை வைத்தும் அவர்கள் ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பது போல் சித்தரித்து வீடியோக்கள் வெளியிட்டு இளைஞர்கள் மனதில் ஆசையை தூண்டி ஆன்லைன் ரம்மி விளையாடுங்கள் பணம் சம்பாதிக்கலாம் என பல கம்பெனிகள் வெளிப்படையாக விளம்பரம் செய்து வருகின்றனர் இந்த விளம்பரங்களை நம்பி இளைஞர்கள் ரம்மி விளையாட்டில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த பின்பு தற்கொலை செய்து கொள்கின்றனர்.

இந்த நிகழ்ச்சி தினம்தோறும் நடைபெறுகின்றது எனவே தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி இணையதளத்தில் உள்ள ஆன்லைன் ரம்மி ஆப்புகளை தடை செய்ய வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் மகளிர் அணியினர் பொதுமக்கள் என ஏராளமாக கலந்து கொண்டனர் ஆன்லைன் ரம்மி ஆப்புகளை தடை செய்யக்கோரி பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர் பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்
இன்னும் 40 நாட்கள் இதே விலை தொடரும் எனவும் அதனை தொடர்ந்து வெளி மாநிலங்களில் இருந்து பருப்பு வரத்தை பொறுத்து விலை குறைய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.