இடைக்கால பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பாலசுப்பிரமணி அலங்காரத்தில் முருகப்பெருமானை தரிசனம் செய்தார்.
முன்னால் முதல்வரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிக்சாமி இடைக்கால பொதுசெயலாளராக பொறுப்பேற்றதற்கு பிறகு திண்டுக்கல் மாவட்டம் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டா யுதபாணி செய்வதற்காக நேற்று மாலை பழனிக்கு வருகை புரிந்தார். இடைக்கால பொதுச்செயலாளர் வரவேற்கும் விதமாக கழக துணை பொதுச்செயலாளரும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் நத்தம் இரா விஸ்வநாதன், கழக பொருளாளரும் திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழகச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இருவரும் இணைந்து பழனியில் ஒரு வரவேற்பினை எடப்பாடிக்கு அளித்தனர். இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை ரோப் கார் வழியாக பழனி மலைக் கோயிலுக்கு சென்று அருள்மிகு தண்டாயுதபாணி கர்ப்ப கிரகமான மூல வறைக்கு கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி யார் தரிசனத்திற்காக உள்ளே சென்றார் . முருகப்பெருமான் வேடர் அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். இடைக்கால பொதுச்செயலாளர் மூல வரையில் அமர்ந்து வேடர் அலங்காரத்தில் காட்சி அளிக்கக்கூடிய முருகப்பெருமானை தரிசனம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து பாலசுப்பிரமணிய அலங்காரத்தில் இரண்டாவது முறையாக காத்திருந்து தரிசனம் மேற்கொண்டார். இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி யாருளுடன் கழக துணை பொதுச்செயலாளர் நத்தம் இரா விஸ்வநாதன் ,கழக பொருளாளர் திண்டுக்கல் சி சீனிவாசன், எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் வி உதயகுமார் ,கழக அமைப்புச் செயலாளர் மருதராஜ், கழக இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம், கழக அம்மா பேரவை இணைச் செயலாளர் கண்ணன், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ் சத்யன் உள்ளிட்ட முன்னாள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் உடன் இருக்கின்றனர்.