• Sat. Oct 10th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

பி.கே. மூக்கையாத் தேவர் பிறந்தநாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை..,

ByP.Thangapandi

Apr 4, 2026

பி.கே. மூக்கையாத் தேவர் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக வேட்பாளர் இ. மகேந்திரன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் உள்ள பி.கே. மூக்கையாத் தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

5 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், உசிலம்பட்டி, கமுதி, மேலநீதிநல்லூர் உள்ளிட்ட மூன்று இடங்களில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரிகளை கொண்டு வந்தவருமான பி.கே. மூக்கையாத்தேவரின் 103 வது பிறந்தநாளை முன்னிட்டு

இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் உள்ள பி. கே. மூக்கையாத் தேவர் 103 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அதிமுக கட்சியின் சார்பில் கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவும் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி அதிமுக வெற்றி வேட்பாளர் இ. மகேந்திரன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் துரை தனராஜ், உசிலம்பட்டி நகரச் செயலாளர் பூமாராஜா மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.