• Wed. Dec 11th, 2024

விரைவில் புதிய பாடத்திட்டம் அறிமுகம்.. அமைச்சர் பொன்முடி தகவல்..!

ByA.Tamilselvan

Sep 13, 2022

தமிழகத்துக்கான புதிய பாடத்திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
‘நான் முதல்வன்’ திட்டத்தின் மண்டல மாநாடு சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தர் அரங்கில் நேற்று நடந்தது.
இதில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த 68 பொறியியல் கல்லூரிகளின் முதல்வர்கள், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டை தொடங்கி வைத்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது; “பொறியியல் கல்லூரிகளில் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது.பொறியியல் படிப்பவர்கள் உங்கள் பகுதியில் தேவைப்படும் தொழில்களை நீங்களே செய்ய வேண்டும் என்பதற்காக பல்வேறு பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2007-ம் ஆண்டு நுழைவுத் தேர்வை ரத்து செய்து சட்டம் போட்டதால்தான், அதிக அளவில் கிராமப்புற மாணவர்கள் பொறியியல் படிக்க வாய்ப்பு கிடைத்தது.தற்போது, அனைத்து படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வை நுழைக்கப் பார்க்கின்றனர். அத்துடன் 3, 5, 8-ம் வகுப்புகளிலும் பொதுத் தேர்வை உருவாக்க நினைக்கின்றனர்.
அதற்காகவே தமிழகத்துக்கு என புதிய கல்விக் கொள்கையை உருவாக்க முதல்வர் முயற்சி எடுத்து வருகிறார். கலை, அறிவியல் கல்லூரிகளிலும் விரைவில் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது” என்று தெரிவித்தார்.