• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

மது அருந்த பணம் தர மறுத்த பெற்ற தாயை மகன் கட்டையால் அடித்து கொலை.., போலீசார் விசாரணை…

ByP.Thangapandi

Feb 4, 2024

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆனையூரைச் சேர்ந்தவர் பால்ச்சாமி மனைவி காசம்மாள்., விவசாய கூலி தொழிலாளியான இவர் கடைசி விவசாயி திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற நல்லாண்டிக்கு தங்கையாகவும், நடிகர் விஜய் சேதுபதிக்கு அத்தையாகவும் நடித்திருந்தார்.

இவருக்கு நமகோடி, தனிக்கொடி என்ற இரு மகன்கள் உள்ள நிலையில் மூத்த மகன் நமகோடி மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக தாய் தந்தை வீட்டிலேயே வசித்து வருவதாகவும், மது போதைக்கு அடிமையான நமகோடி அடிக்கடி மது அருந்த பணம் கேட்டு தாய் காசம்மாளுடன் தகராறில் ஈடுபடுவது வழக்கமாக வைத்திருந்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த தாயை எழுப்பி வழக்கம் போல மது அருந்த பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார், பணம் தர மறுத்த தாய் காசம்மாளை கட்டையால் தாக்கிவிட்டு சென்றுள்ளார்.

தலைப்பகுதியில் பலத்த காயமடைந்த காசம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாகமாக உயிரிழந்த நிலையில், ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த காசம்மாளைக் கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலீசார் காசம்மாள்-ன் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு பெற்ற தாயை அடித்து கொன்ற மகன் நமகோடியை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மது அருந்த பணம் தர மறுத்த தாயை மகன் கட்டையால் அடித்து படுகொலை செய்த சம்பவம் உசிலம்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.