• Fri. May 10th, 2024

தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் மீது அவதூறான கருத்து, சமூக வலைதளங்களில் பரப்பியதாக புகார்:

ByKalamegam Viswanathan

Feb 4, 2024

தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை விதிபடியே யாதவா கல்லூரியை தற்காலிகமாக நிர்வகித்து வருவதாகவும், எந்த அரசியல் தலையீடு இல்லை என்றும் யாதவா கல்லூரி முன்னாள் முதல்வர் கண்ணன் பேட்டி..,

மதுரை ஐயர் பங்களா பகுதியில் யாதவ கல்லூரி(இருபாலர்) நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த கல்லூரி யாதவ சமுதாயத்திற்கு சொந்தமான கல்லூரி. இதை நிர்வகிப்பதில் இரு தரப்பினருக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதனால் நீண்ட காலமாக கல்லூரி நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறாமல் இருந்தது. பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தேர்தல் நடத்துவதற்கு உத்தரவு பெறப்பட்டது.

இந்த கல்லூரியில் கடந்த வருடம் 2023 ஆண்டு நிர்வாகிகளுக்கான தேர்வு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் கமிட்டி அமைத்து நீதிமன்ற உத்தரவின்படி நடத்தினர்.

பின்னர் நடைபெற்ற தேர்தல் முறையாக நடைபெறவில்லை என கூறி மற்றொரு தரப்பு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது அந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை யாதவா கல்லூரி நிர்வாக குழு தேர்தல் செல்லாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் கல்லூரியை நிர்வகிப்பதற்கு நிர்வாகிகள் இல்லாததால் தமிழ்நாடு அரசின் உயர் கல்வி துறை செயலாளர் கல்லூரி நிர்வாகத்தை தற்காலிகமாக எடுத்துக் கொண்டனர். தற்போது உயர்கல்வித்துறை சார்பாக இந்த கல்லூரி தற்காலிகமாக நிர்வாகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த கல்லூரியில் முன்னாள் நிர்வாகியான நவநீதகிருஷ்ணன் என்பவர் இந்த கல்லூரி திட்டமிட்டு ஒரு தரப்பினரால் உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனை சந்தித்து கல்லூரியை உயர்கல்வித்துறை நிர்வகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், தமிழக அரசு பற்றி உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனை பற்றியும் அவதூறான கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவதாக கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தினர் மற்றும் யாதவ கல்லூரி கல்வி குழு உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பாக கல்லூரியின் முன்னாள் முதல்வர் கண்ணன் பேசும்போது உயர்நீதிமன்ற உத்தரவின் படி தேர்தல் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கல்லூரியை முறைப்படி உயர்கல்வித்துறை நிர்வகித்து வருகிறது. இது தற்காலிகமான ஏற்பாடு தான். புரிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் மீண்டும் கல்லூரி எங்கள் சமுதாயத்துடன் ஒப்படைக்கப்படும். ஆனால் இடைப்பட்ட காலங்களில் நவநீதகிருஷ்ணன் என்பவர் தவறான கருத்துக்களை தமிழ்நாடு அரசு மீதும் உயர்கல்வித்துறை அமைச்சர் மீதும் கூறி வருகிறார். அவர் இத்தோடு அதை நிறுத்திக் கொள்ள வேண்டும் தொடர்ந்து இவ்வாறு தமிழ்நாடு அரசு மீதும், அமைச்சர் மீதும் அவதூறான கருத்துக்களை கூறி வந்தால், அவர் மீது உரிய புகார் அளிக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *