• Mon. Dec 9th, 2024

மதுரையில் சொகுசு காரை அடித்து நொறுக்கிய ஆறு பேர் கைது..!

Byவிஷா

Mar 28, 2023

மதுரையில் உள்ள மதுபானக்கடை முன்பு நிறுத்தியிருந்த காரை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம், மதுரை மாநகரில் ஐயர் பங்களா பகுதியில் மதுபானக்கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்தக் கடை முன்பு நிறுத்தியிருந்த சொகுசு காரை அங்கு மது அருந்திய கோசா குலம் பகுதியைச் சேர்ந்த திருக்குமார் பிரபு பாண்டியன் ரமேஷ் கார்த்திக் ராஜா மற்றும் ராஜா என்ற ஆறு பேர் அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அதை தொடர்ந்து மதுபான கடையின் பாதுகாவலர் நாகராஜன் தல்லாகுளம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து, ரகளையில் ஈடுபட்ட ஆறு பேரையும் கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.