• Fri. Aug 7th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

அமைச்சர் ஆனந்த் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட நிகழ்ச்சி..,

ByPrabhu Sekar

Jul 20, 2026

ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் N. ஆனந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சமூக அக்கறையை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பான நலத்திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளையைச் சேர்ந்த சிறுவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டதுடன், புதிய ஆடைகளும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. மேலும், அமைச்சர் N.ஆனந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அனைவரும் இணைந்து கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

நிகழ்ச்சிக்கு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் D.சரத்குமார் தலைமை தாங்கினார். சமூக சேவை மற்றும் மனிதநேய பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சிறுவர்களுடன் அமைச்சர் மற்றும் நிர்வாகிகள் கலந்துரையாடி, அவர்களுக்கு வாழ்த்துகளையும் ஊக்கத்தையும் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேடவாக்கம் S. பாஸ், MCA சிறப்பாக செய்திருந்தார். பல்வேறு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அமைச்சர் N. ஆனந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.