மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியும், ஓய்வூதியம், நிலுவையுடன் கூடிய அகவிலைப்படி, சரண்டர், சத்துணவு அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர் எம்.ஆர்.பி செவிலியர் ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்ட 3லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம், 6லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட தமிழ்நாடு முழுவதும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்