• Fri. Aug 7th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

புகையிலை குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்கும் விதமாக அதிகாரிகள் ஆய்வு..,

ByK Kaliraj

Jul 20, 2026

விருதுநகர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்கும் விதமாக மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர். மாரியப்பன் தலைமையிலான உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் இணைந்து வணிக நிறுவனங்கள், பெட்டிகடைகளில் தீவிர ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்திய ஆய்வில் தடைசெய்யப்பட்ட புகையிலை கலந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக, 24 உணவு வணிகர்கள் கண்டறியப்பட்டு, அவற்றிற்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும்10 லட்சம் ரூபாய் அபாரதமும் விதிக்கப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆய்வு குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா விற்பனை குறித்தும், உணவுப் பொருட்களின் தரங்கள் குறைபாடு குறித்தும் பொதுமக்கள் 9444042322 என்ற மாநில வாட்ஸ்அப் புகார் எண்ணிற்கோ அல்லது https://foodsafety.tn.gov.in என்ற இணையதளத்தி்ற்கோ அல்லது TN Food Safety என்ற செயலிற்கோ புகார் அளிக்கலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.