பிரின்ஸ் திரைப்பட வசூல் மூலம் நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் திரையுலகில் தொடர்ந்து உச்சத்தை நோக்கி பயணிக்கும் நடிகராக உள்ளார் என்பதை நிரூபித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 21-ம் தேதியே சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் மற்றும் கார்த்தி நடித்த சர்தார் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகாத நிலையில், இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக பிரின்ஸ் திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு இருக்கும் என கணிக்கப்பட்டது.பிரின்ஸ் திரைப்படம் முதல் நாளில் 3 கோடியே 90 லட்சம் வசூலித்துள்ளது.
தீபாவளியன்று மிகப்பெரும் வசூல் செய்த பிரின்ஸ், சிவகார்த்திகேயன் மாஸ் .இப்படம் ரசிகர்களிடம் குறிப்பாக 2கே கிட்ஸ் என்று அழைக்கப்படுபவர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் தீபாவளியன்று நேற்று மட்டும் பிரின்ஸ் படம் தமிழகத்தில் ரூ 6 கோடி வசூல் செய்ய, தமிழகத்தில் 25 கோடி உலகம் முழுவதும் இப்படம் ரூ 35 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து உச்சத்தை நோக்கி பயணிக்கும் நடிகராக சிவகார்த்திகேயன் உள்ளார் என்பதை பிரின்ஸ் திரைபட வசூல் நிருபித்துள்ளது.
தமிழ் சினிமாவின் உச்சத்தை நோக்கி பயணிக்கும் சிவகார்த்திகேயன்
