

தீபாவளி அன்று மது விற்பனையில் மதுரை முதலிடம் பிடித்துள்ளது.ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் பொழுது டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை குறித்து விபரம் வெளியிடப்படும்.அதன்படி கடந்த மூன்று தினங்களில் தமிழகம் முழுவதிலும் 708 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதில் மதுரை மாவட்டத்தில் மட்டும் 154கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகம் என்றும் டாக்மாக் தரப்பில் தகவல் தெரிவிக்கின்றனர்.

