• Thu. Dec 12th, 2024

சிவகங்கை மாவட்டத்திற்கு மழை போதாது – அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் தகவல்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள பாலாற்றுப்படுகை, காளாப்பூர் தடுப்பணை அணைக்கரைப்பட்டி பாலம், மேலப்பட்டி அணைக்கட்டு பகுதிகளை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அணைக்கட்டுகளின் தரம் மற்றும் நீர்வரத்து பற்றிய விளக்கங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கேஆர். பெரியகருப்பன், சிவகங்கை மாவட்டத்திற்கு மணிமுத்தாறு, விரிசலை ஆறு, பாலாறு, தேனாறு ஆகிய நான்கு ஆறுகள் நீர் ஆதாரமாக விளங்குவதாகவும், தற்போது பெய்த மழையால் மாவட்டத்திற்கு 100% பலன் அளித்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், மழையால் மாவட்டத்தில் பாதிப்பு ஏதும் இல்லை என்றவர், மாவட்டத்தில் உள்ள 543 கண்மாய்களில் 75 கண்மாய்கள் தற்போது நீர் நிரம்பி உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் சிவகங்கை மாவட்டத்திற்கு தற்போது பெய்த மழை போதாது எனவும் வரும் காலங்களில் ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்படும் எனவும் உறுதியளித்தார்.