

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தாலுகா நீடூர் அடுத்த கடுவங்குடி கிராமத்தில் பழமை வாய்ந்த சித்தி விநாயகர் பேச்சாயி அம்மன், விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது.

ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 14ஆம் தேதி யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. புனித நீர் கடங்களில் வைக்கப்பட்டு, சிறப்பு ஹோமங்களுடன் யாக சாலை பூஜைகள் நடைபெற்றன இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்தன. தொடர்ந்து மகாபூர்ணாகுதி செய்யப்பட்டது.
இதனை அடுத்து மங்கள வாத்தியங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக கோபுர கலசங்களுக்கு எடுத்துவரப்பட்டு கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கருவறையில் மூலவர் அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

