பதினெண்சித்தர்கள் என்று இன்று நாட்டு வழக்கில் கூறப்படும் பட்டியலைச் சேர்ந்தவர்கள் உண்மையில் 48 வகைச் சித்தர்கள் ஆவார்கள். இவர்கள் பதினெண்சித்தர்கள் அல்ல! அல்ல! அல்ல! அல்லவே அல்ல!
மூலப் பதினெண்சித்தர்கள் என்பவர்கள் இந்த மண்ணுலகத்திற்கு வேற்று அண்டங்களிலிருந்து இந்த உலகம் தோன்றிய காலத்தே வந்தவர்கள். அவர்கள் இந்த மண்ணுலக உயிரினங்களிலேயே உயர்ந்த மணீசரைப் பண்படுத்தி மனதையுடைய மனிதர்களாக்கினார்கள். இதற்கு அவர்கள் பயன்படுத்திய மொழி இந்தப் பதினெண்சித்தர்களின் தாய்மொழியான தமிழ்மொழி. அதனாலேயே தமிழ்மொழி “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே மூத்த மொழி” என்று குறிப்பிடப் படுகின்றது.
இந்த மூலப் பதினெண்சித்தர்கள் மண்ணுலக மனிதர்களோடு உறவு பூண்டு நேரடி வாரிசுகளை உண்டாக்கினார்கள். “பதினெண்சித்தர்களின் வழிவந்தவர்களே பதினெண் வேளிர்கள்” என்றொரு முன்னோர் வாக்கு இதனையே குறிக்கின்றது. இந்த வாரிசுகள் வழிவந்தவர்கள் காலப் போக்கில் அருளுலகப் பயிற்சி முயற்சிகளில் தேர்ச்சி பெற்று சித்தர்கள் நிலையை அடைந்திடுகின்றனர். அப்படி சித்தர் நிலையை அடைந்தவர்கள் 48 வகைச் சித்தர்களில் ஒருவராக அருளுலகத்தாரால் ஏற்றுக் கொள்ளப் பட்டனர் என்பார்.
எங்கள் குருதேவர் அருட்பேரரசர்’அன்பு சித்தர்’
கட்டுரையாளர் – சோம்நாத்