• Sun. May 5th, 2024

89 தொகுதிகளுக்கு நாளை 2-ம் கட்ட தேர்தல்

Byவிஷா

Apr 25, 2024


கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் நேற்று மாலையுடன் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், நாளை 89 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. அதில், முதற்கட்டமாக கடந்த 19-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த, 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழ்நாட்டில் 69.72மூ வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில், நாளை பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 89 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 13 மாநிலங்களைச் சேர்ந்த 89 தொகுதிகளில் இரண்டாம் கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டைப் போலவே கேரளாவிலும் 20 தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

நாளை வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்கள்:

     கேரளா  –  20 தொகுதிகள்
 கர்நாடகா – 14 தொகுதிகள்,
 ராஜஸ்தான்  – 13 தொகுதிகள்
 உத்தரப்பிரதேசம் – 8 தொகுதிகள்
 மகாராஷ்ட்ரா  – 8 தொகுதிகள்
 மத்தியப் பிரதேசம் – 7 தொகுதிகள்
 அசாம்  – 5 தொகுதிகள்
 பீகார் –  5 தொகுதிகள்
 சத்தீஸ்கர்  – 3 தொகுதிகள்
 மேற்கு வங்கம் – 3 தொகுதிகள்
 மணிப்பூர் – 1 தொகுதி
 திரிபுரா  – 1 தொகுதி
 ஜம்மு, காஷ்மீர் – 1 தொகுதி 

வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் தயார் செய்துள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *