திருப்பரங்குன்றம் மலைக்குப் பின்புறத்தில் மலை அடிவாரத்தில் பால்சுனை கண்ட சிவபெருமான் கோவில் உள்ளது. இந்த திருக்கோவில் மிகப் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும். இங்கு பால்சுனை கண்ட சிவபெருமான், நந்திதேவர் தனியாக பால திரிபுரசுந்தரி, நாகராணி, பஞ்சலிங்கங்கள், ஆஞ்சநேயர் இவர்கள் அனைவரும் இயற்கையோடு இயற்கையாக பக்தர்களுக்கு காட்சி கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர். திருக்கோவிலில் பௌர்ணமி, அமாவாசை போன்ற தினங்களில் மிக விசேஷமாக இருக்கும்.
திடீரென நேற்று அதிகாலை பாலதிரிபுரசுந்தரிக்கு முன்பு ஒரு வில்வ இலை தோன்றி பூஜை செய்து கொண்டிருந்தது. இதைக் கண்ட பக்தர்கள் சிவனே வில்வ இலையாக மாறி பாலதிரிபுர சுந்தரிக்கு பூஜை செய்து கொண்டிருக்கிறார் என்று ஹர ஹர மகாதேவா என்று கோஷமிட்டு வணங்கி நின்று (வில்வ இலை பூஜை செய்யும்) அந்த காட்சியை அதிசயத்தோடு கண்டு களித்துக் கொண்டிருந்தனர் இந்த நிகழ்வு பத்து நிமிடத்திற்கு மேல் நடந்தது. இதைக் கேள்விப்பட்ட பக்தர்கள் பால் சுனை கண்ட சிவபெருமானையும் பால திரிபுரசுந்தரியை காண்பதற்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.