விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66-வது படத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.
இந்த படத்திற்கு தற்காலிகமாக “தளபதி 66” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார்.இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாகவும் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைக்க வுள்ளதாகவும் நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் சென்னையில் தொடங்களாவுள்ளதாக கூறப்படுகிறது. பூஜையில் விஜய், இயக்குனர் வம்சி உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றகவுள்ளனர். விரைவில் அதற்கான புகைப்படங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.