காஷ்மீர் லடாக் பகுதியில் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது நினைவாக எல்லையான லே பகுதியில் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி கேட்டு சிவசேனா கட்சியின் இளைஞரணி சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு. அளித்துள்ளனர்.
காஷ்மீர் லடாக் பகுதியில் மத்திய அரசு 370ஏ சட்ட பிரிவை ரத்து செய்தது இந்த செயல் வரவேற்கத்தக்க ஒன்றாக உள்ளது இதன் நினைவாகவும் கொண்டாடும் வகையில் லடாக் பகுதியில் அம்பேத்கர் சிலை அமைக்க கோரி சிவசேனா கட்சியின் மாநில தலைவர் திருமுருக தினேஷ் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினார்
இதுகுறித்து அவர் கூறும்போது காஷ்மீர் லடாக் பகுதியில் மத்திய அரசு 370 ஏ சட்டப்பிரிவு ரத்து செய்துள்ளது இது வரவேற்கத்தக்க ஒன்று மேலும் அந்த பகுதியில் யார் வேண்டுமானாலும் குடியேறலாம் யார் வேண்டுமானாலும் தங்களுக்கு தேவையான நிலங்களை வாங்கலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது என்பதை நாங்கள் முழுமனதுடன் வரவேற்கிறோம்
சட்ட திருத்தம் கொண்டு வந்த நாளை நினைவாக கொண்டாடும் வகையில் லடாக் பகுதியில் தங்களுக்கு நிலம் வாங்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் அந்த நிலத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர் சட்ட மாமேதை அம்பேத்கர் சிலை வைக்க அனுமதி வேண்டுமென கேட்டு சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்.