பனை தொழிலாளர்களின் வாழ்வில் ஒளி ஏற்றியவர் தமிழக முதல்வர் என நாடார் பேரமைப்பு நிறுவன தலைவர் ராகம் சௌந்திரபாண்டியன் புகழாரம் சூட்டியுள்ளார்.
தென்காசி மாவட்டம் முக்கூடல் அருகேயுள்ள கலிதீர்த்தான் பட்டியில் இந்திய நாடார்கள் பேரமைப்பு சார்பில் பனைத்தொழிலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நிறுவனத் தலைவர் ராகம் சௌந்திரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசும்போது பனைத்தொழிலாளர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிவைத்தவர் தமிழக முதல்வர் முகஸ்டாலின் என்றும் அவருக்கு நாடார் பேரமைப்பு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும் பனைமரம் ஏறும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், தமிழகத்தில் பனை தொழிலை பாதுகாக்கவும், பனைமரத்திலிருந்து கிடைக்க கூடிய பதனீர், நுங்கு, பனை ஓலை, பனைநார் மற்றும் நவீன இயந்திரங்களை கொண்டு கருப்பட்டி, பனங்கற்கண்டு, பதப்படுத்தப்பட்ட நுங்கு மற்றும் பல்வேறு பனைப்பொருட்களை தயாரிப்பதற்கான தொழிற்சாலை விரைவில் தொடங்கபடும் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாநில துணை தலைவர் லூர்து நாடார், தென்காசி தெற்கு மாவட்ட தலைவர் ஹரிஹர செல்வன், தெற்கு மாவட்ட செயலாளர் சுதன், துணைசெயலாளர் ஹரிகிருஷ்ணன், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் மாயகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.