• Sat. Apr 20th, 2024

50 ஆண்டுகளுக்கும் மேலாக மின்விளக்குகளால் ஜொலிக்கும்.. நாகர்கோவில் மாநகராட்சி பூங்கா..!

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் மாநகராட்சி பூங்காவில் உள்ள வானுயர்ந்த மரங்கள் மற்றும் சந்திப்பு பகுதியில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பல்வேறு வண்ணங்களில் ஜொலிக்கின்ற காட்சிகளை ஏராளமானோர் கண்டு களித்து செல்கின்றனர்.

பல ஆண்டுகளாக தமிழகத்திலேயே சரஸ்வதி பூஜைக்கு மின்விளக்குகளால் பொது இடங்கள் அலங்கரிக்க படுவது நாகர்கோவிலில் மட்டுமே 50 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை மிகவும் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். தொழில் நிறுவனங்கள் மேலும் மேலும் வளர கல்வி மற்றும் செல்வம் செழிக்கும் என்ற நம்பிக்கை அடிப்படையில் இந்த விழாக்கள் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக சரஸ்வதி பூஜை ஆயுத பூஜையை முன்னிட்டு மாநகராட்சி பூங்காவில் இருக்கின்ற வளர்ந்த மரங்களுக்கு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அந்த சந்திப்பு முழுவதும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இரவு நேரத்தில் மின்னொளியில் பிரகாசிக்கும் காட்சிகளை ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக வந்து பார்த்து செல்கின்றனர்.


தமிழகத்தில் பல்வேறு இடங்களில், சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை பண்டிகைக்கு மின்விளக்கு அலங்காரம் செய்யப்படுவது வழக்கமாக இருந்து வந்த போதிலும் கூட, தமிழகத்திலேயே நாகர்கோவில் மட்டுமே ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வருகிறது. இங்குள்ள கார் ஓட்டுநர் சங்கம் சார்பாக இது ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அது மட்டுமன்றி நாகர்கோவிலில் பல்வேறு இடங்களில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை பண்டிகைக்கு தேவையான பொறி அவல் விற்பனையும் களைகட்டியுள்ளது.
விசுவல்

  1. நாகர்கோவிலில் வேப்பமூடு சந்திப்பில் இரவிலும் வானுயர்ந்த மரங்களில் ஜொலிக்கும் மின் விளக்கு அலங்காரங்கள்.
  2. நாகர்கோவிலில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் பொறி அவல் விற்பனை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *