• Fri. Jan 17th, 2025

வடமதுரை அருகே குளம் போல் காட்சியளிக்கும் சாக்கடை நீர், தொற்றுநோய் பரவும் அபாயம்

Byதரணி

Jun 14, 2024

வடமதுரை அருகே குளம் போல் காட்சியளிக்கும் சாக்கடை நீர், தொற்றுநோய் பரவும் அபாயம் – மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

திண்டுக்கல் வடமதுரை அருகே நான்கு வழி சாலை தென்னம்பட்டி பைபாஸ் பிரிவு அருகே சாக்கடை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.