
பழனி திண்டுக்கல் சாலையில் கல்லூரி மாணவர்கள் குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த நிலையில் போலீசார் திடீரென திண்டுக்கல் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த பால சமுத்திரத்தைச் சேர்ந்த கோகுல கண்ணன், பழனி நகரைச் சேர்ந்த மணிகண்டன், கார்த்திக், நாகேந்திர பிரசாத், முகமது சேக் ,சரவணகுமார் , முகசூரியா ஆகிய ஏழு இளைஞர்களைப் பிடித்து விசாரணை செய்தனர். போலீஸ்காரின் விசாரணையில் கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா விற்பனை செய்வதற்காக ஏழு பேரும் காத்திருந்தது தெரியவந்தது.
பிடிபட்ட நபர்களிடமிருந்து கஞ்சா மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் ஏழு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
