பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் மலை மீது எளிதாக சென்று வர வசதியாக ரோப் கார் சேவை இயக்கப்பட்டு வருகிறது. ரோப் காரில் பயணம் செய்யும் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கோயில் நிர்வாகம் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் ரோப் காரில் பக்தர்கள் செல்லும் போது பழுதாகி நின்றால் அந்தரத்தில் பெட்டியில் உள்ள பக்தர்களை மீட்பது எப்படி என்பது குறித்து தேசிய பேரிடர் மீட்பு குழு வீரர்கள் ஒத்திகை நிகழ்ச்சியை செய்து காண்பித்தனர். 200 அடி உயரத்தில் தொங்கிக் கொண்டிருந்த பெட்டியில் இரண்டு வீரர்கள் மாட்டிக்கொண்ட நிலையில் கயிறு கட்டி மேலே செல்லும் வீரர் பத்திரமாக மீட்டு வருவது எப்படி என்பதை செயல்முறையாக செய்து காண்பித்தனர்.
நிகழ்ச்சியில் கோயில் ஊழியர்கள், ரோப் கார் பணியாளர்கள், தீயணைப்பு படை வீரர்கள் பலரும் கலந்து கொண்டனர். ரோப்காரில் பயணம் செய்யும் பக்தர்களின் பாதுகாப்பு கருத்தில் கொண்டு இது போன்ற ஒத்திகை நிகழ்ச்சியை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் செய்து காண்பித்தனர்.