• Mon. Jul 14th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

சேது சமுத்திரத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்-தி.க.கட்சி தலைவர் வீரமணி பேச்சு

ByJawahar

Feb 10, 2023

முசிறியில் நடைபெற்ற தி.க. பொதுகூட்டத்தில் பேசிய வீரமணி சேது சமுத்திரத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முசிறி பேரு புதிய பேருந்து நிலையத்தில் திராவிட கட்சியினர் சமூக நீதி பாதுகாப்பு மற்றும் திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் இரத்தினம் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் ஆல்பர்ட் லால்குடி கழக மாவட்ட தலைவர் வால்டர் முசிறி நகர செயலாளர் சீனிவாசன் ஒன்றிய தலைவர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கூட்டத்தில் கலந்து கொண்ட திராவிட கழக தலைவர் வீரமணி பேசியதாவது.
200க்கும் மேற்பட்ட உலக நாடுகள் உள்ளது பல நாடுகளில் மனிதன் மனிதனாக உள்ளான் ஆனால் நமது நாட்டில் மட்டும் மனிதன் மனிதனாக இருப்பதில்லை காரணம் மனிதனுக்கு மனிதனே தங்களை வேற்றுமைப்படுத்துகிறான் இந்த வேற்றுமையை ஒற்றுமை படுத்துவதற்கு தான் திராவிட கழகம் போராடி வருகிறது கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என கிராமத்தில் பெரியோர்கள் கூறியது தற்போது கூறு போடப்பட்டுள்ளது.
சனாதனத்தை எதிர்த்து சமதர்மம் வர வேண்டும் என்பதை சொல்லி மக்களிடம் சமூகநீதி விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவருக்கும் அனைத்தும் கிடைப்பது என்பதே திராவிட மாடல் எனவும் ராமர் பாலம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பாஜக அமைச்சரே கூறுகிறார். ஆகவே தடைப்பட்டு இருக்கும் சேது சமுத்திரத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். அதன் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும் என்று பேசினார். முன்னதாக மண்டல செயலாளர் மணிவண்ணன் அனைவரையும் வரவேற்றார். மண்டல இளைஞரணி தலைவர் அன்பு ராஜா, மாவட்ட பகுத்தறிவு அணி தலைவர் சண்முகம், உறுப்பினர் தர்மராஜ், காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் காமராஜ், விடுதலை சிறுத்தை கட்சி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கலைச்செல்வன், உட்பட நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.முடிவில் மாவட்ட செயலாளர் அங்க முத்து அனைவருக்கும் நன்றி கூறினார்.