• Fri. Apr 26th, 2024

காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் நீர்வள ஆதாரத்துறையினர் பணிகள் குறித்து பாராட்டு

ByJawahar

Feb 10, 2023

காட்டுப்புத்தூர் பேரூராட்சி சிறப்பாகவும், பேரூராட்சிகளுக்கு முன்னுதாரனமாக செயல்படுவதாகவும் செயல் அலுவலருக்கு பாராட்டு

திருச்சிராப்பள்ளி மாவட்ட நீர்வள ஆதார துறை செயற்பொறியாளர் கீதா, உதவி செயற்பொறியாளர் பாலமுருகன், உதவி பொறியாளர்கள் செந்தில்குமார், ஞானமணி, ரஞ்சித்குமார், செந்தில்ராஜ், சதீஸ் ஆகியோர் காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் செயல்படுத்திவரும் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகளான இயற்கை எரிவாயு கலன் செயல்பாடு, மாடித்தோட்டத்தில் உள்ள மூலிகை செடிகள், துணி கழிவுகளைக் கொண்டு இயந்திரம் மூலம் கால்மிதியடிகள் தயாரிப்பது, வளம்மீட்பு பூங்காவில் மக்கும் குப்பைகளை கொண்டு இயற்கை உரம் தயாரித்தல், மண்புழு உரம் தயாரித்தல், மக்காத குப்பைகளை தரம்பிரிக்கும் பணி, மண்புழு குளியல் நீர் தயாரித்தல், நர்ஸரி கார்டன், முட்டை ஓட்டிலிருந்து காட்ரோஸ் பவுடர் தயாரித்தல், எலுமிச்சை தோல் மற்றும் ஆரஞ்சு தோல் ஆகியவற்றின் மூலம் தயாரிக்கப்படும் காட்பவுடர், தூய்மை பணியாளர்களுக்காக வைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், வாழைத்தண்டு, காய்கறிகள் ஆகியவற்றை இயற்கை உரமாக மாற்ற சிறுசிறு துண்டுகளாக்கும் இயந்திரம், பிளாஸ்டிக் குப்பைகளை கட்டும் இயந்திரம், பிளாஸ்டிக் கழிவுகளை அரைக்கும் இயந்திரம், பழைய குப்பைகளை தீர்வு செய்யும் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது, நாட்டுக்கோழி, கருங்கோழி, வாத்து, மாணவர்களை கவர்வதற்காக வளர்க்கப்படும் முயல் மற்றும் பறவைகள் ஆகியவற்றையும் பார்வையிட்டார்கள். நெகிழி ஒழிப்பு திட்டம் செயல்பாட்டில் வெளியிடப்பட்டுள்ள வாடகை மஞ்சள் பையினை செயல் அலுவலர் அறிமுகப்படுத்தினார். மேலும், காட்டுப்புத்தூர் பேரூராட்சி சிறப்பாகவும், பேரூராட்சிகளுக்கு முன்னுதாரனமாக செயல்படுவதாகவும் செயல் அலுவலர் ச.சாகுல் அமீதுவை பாராட்டினார்கள். இந்நிகழ்வில் உடன் இளநிலை உதவியாளர்கள் இராஜேந்திரன், துப்புரவு மேற்பார்வையாளர் (பொ) கண்ணன் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *