அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் வீட்டில் ரகசிய ஆவணங்கள் கிடைத்ததாக எப்பிஐ தெரிவித்துள்ளது. டொனால்ட் டிரம்புக்கு சொந்தமான புளோரிடா எஸ்டேட்டில் கடந்த திங்கள் அன்று எப்பிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அமெரிக்க வரலாற்றில் ஒரு முன்னாள் அதிபர் வீட்டில் சோதனை நடந்தது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.இந்நிலையில் இந்த சோதனையில் அரசு கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கக்கூடிய மற்றும் அணுஆயுதங்கள் தொடர்பான ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக எப்பிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.