முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி. பாஸ்கர் வீட்டில் தங்கம் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்சஒழிப்புத்துறை தகவல்
அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒலிப்புத்துறை நடத்திய சோதனையில் 1.68 கிலோ தங்கம், 6.6 கிலோ வெள்ளி ரூ14.96 லட்சம் ரொக்கம் ,சொகுசு கார்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் கிரிப்டோகரன்சியில் ரூ20 லட்சம் முதலீடு செய்திருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதற்கான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.