• Sun. Jul 12th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

கஞ்சா மற்றும் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த நபர் கைது..,

ByKalamegam Viswanathan

Jul 12, 2026

மதுரை மாவட்டம், மேலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குமார் நகர் பகுதியில், சிலர் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் ஆயுதங்களுடன் இருப்பதாக மதுரை மாவட்ட காவல்துறையின் சிறப்பு குழுவினருக்கு (Special Team) ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், இன்று (12.07.2026) காலை, சிறப்பு குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று கண்காணிப்பு மற்றும் சோதனை மேற்கொண்டனர். காவல்துறையினரைக் கண்டதும் அங்கிருந்த நபர்கள் தப்பியோட முயன்ற நிலையில், அபினேஷ் (வயது 22), த/பெ. கணேசன், சொக்கம்பட்டி, மேலூர் என்பவரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து, 5.5 கிலோ கஞ்சா, 1 மின்னணு எடை இயந்திரம் (Electronic Weighing Machine), 2 கத்திகள், மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இச்சம்பவம் தொடர்பாக மேலூர் காவல் நிலையத்தில் போதைப்பொருள் தடுப்புச் சட்டம் (NDPS Act) மற்றும் ஆயுதச் சட்டம் (Arms Act) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட நபரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தப்பியோடிய மற்ற குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்ட காவல்துறை, போதைப்பொருள் விற்பனை, கடத்தல் மற்றும் ஆயுதங்களுடன் சட்டவிரோதமாக செயல்படுவோர் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுபோன்ற குற்றச்செயல்கள் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவித்து பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறது.