பிரதமர் மோடி காமன்வெல்த் விளையாட்டுபோட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு விருந்தளிக்கிறார்.22 வது காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த 8ம் தேதி முடிந்தது. இந்த போட்டியில் இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி உட்பட 61 பதக்கங்களை வென்று பட்டியலில் 4 வது இடத்தை பிடித்தது. இந்நிலையில் காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்,வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி டெல்லியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இன்று காலை விருந்தளித்தார்.