கன்னியாகுமரி, அஞ்சுகிராமம் அருகே திடீரென கடல்நீர் பச்சை நிறத்தில் மாறி, அரிய வகை மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள ரஸ்தாகாட்டில் காயா வேம்பு பதி எனும் அய்யா பதி அமைந்துள்ளது. இந்தப் பதியின் முன் பகுதியில் கடல் நீர் முழுவதும் திடீரென பச்சை நிறத்தில் மாறி காணப்படுகிறது. மேலும் கடலிலிருந்து பாசி உள்ளிட்ட கழிவுகளை கரையிலே கடல் அலை ஒதுக்கித் தள்ளுகிறது. அதுமட்டுமின்றி ஒரு சில அரிய வகை மீன்களும் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளது. பொதுவாக கடல் நீர் நீல நிறத்தில் காணப்படும்.
ஆனால் தற்போது இந்தப் பகுதியில் உள்ள கடல் நீர் பச்சை நிறத்தில் காணப்படுகிறது. மீன்களும் இறந்து கரை ஒதுங்கியதால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடையே கடல் நீரில் ஏதேனும் விஷத்தன்மை கலந்து இருக்கலாம்? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.