கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.180-க்கு விற்பனையாகிறது. பீன்ஸ், அவரைக்காய், கத்தரிக்காய் மற்றும் வெண்டைக்காய்களின் விலை 100 ரூபாயை நெருங்குகிறது.
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலையில் மாற்றம் ஏதுமின்றி நேற்றைய விலையான 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கனமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளது.
இதனால் அதன் விலை உயர்ந்து வருகிறது. இந்தநிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் நேற்று இறக்குமதி செய்யப்ட்ட தக்காளி பெருமளவில் விற்பனையாகவில்லை என கூறப்படுகிறது.