• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அரசு மகாகவி பாரதியார் நினைவு மகளிர் உயர்நிலைப் பள்ளியில்.தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில அறிவியல் கண்காட்சி நடைபெற்றது .
சுய சிந்தனையும் கடின உழைப்பும் அறிவியலின் ஆதாரம்’ . விதவிதமான கருவிகள் அல்ல என்று கூறியவர் சர்.சீ.வி.ராமன். மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழா நினைவு அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் 6 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் பல்வேறு அறிவியல் தயாரிப்புகள் கண்காட்சிக்கு வைத்தனர்.

இதனை பள்ளி மாணவிகளும் ஆசிரியர்களும் கண்டு வியந்தனர். பள்ளித் தலைமை ஆசிரியரும் அறிவியல் ஆசிரியருமான பீ.ரவிக்குமார் கண்காட்சியை துவக்கி வைத்து மாணவிகளை பாராட்டி ஊக்கப்படுத்தினார். மேலும் வெற்றி பெற்ற மாணவிகளின் படைப்புகள் மாவட்ட அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த அறிவியல் கண்காட்சிக்கு பொறுப்பாசிரியர் .பெ.ந.சாந்தி ஏற்பாடுகளை செய்திருந்தார். முடிவில் கலையாசிரியர் ரு.அ.சகாயதாஸ் நன்றி கூறினார்..