• Sat. Jul 11th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பள்ளிகள் திறப்பு தேதி மீண்டும் மாற்றம்

ByA.Tamilselvan

Jun 5, 2023

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி ஏற்கனவே மாற்றப்பட்ட நிலையில் கோடை வெப்பம் காரணமாக மீண்டும் மாற்றப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களின் இறுதி பொதுத்தேர்வுகள் நிறைவுபெற்று, தற்போது கோடை விடுமுறை நிறைவடையும் தருவாய் வந்துவிட்டது.
பள்ளிகள் பொதுவாக ஜூன் மாதம் முதல் தேதியில் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், நடப்பு ஆண்டில் கோடை வெயிலின் தாக்கம் என்பது ஜூன் மாதத்தின் 5ம் தேதி ஆகியும் கடுமையாக இருக்கிறது.முதலில் 7ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்ட்ட நிலையில் தற்போது மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.
இதனால் பள்ளிகள் திறப்பு தேதி ஏற்கனவே தள்ளிச்சென்ற நிலையில், வெப்பம் தொடர்ந்து மக்களை வாட்டி வதைப்பதால் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் பள்ளிகள் திறப்பை தள்ளிவைப்பது தொடர்பான அறிவிப்பு உறுதியாகியுள்ளது. அதன்படி,1-5 வகுப்பிற்கு ஜூன் 14ம் தேதியும் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறப்பு தேதி ஜூன் 12 என அறிவிக்கப்பட்டுள்ளது.