கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தின் பல பகுதிகளில் சுற்றித்திரிந்த அரிசிகொம்பன் யானை தற்போது பிடிபட்டுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் சுற்றித்திரிந்த அசிக்கொம்பன் யானை கடந்த மாதம் அந்த மாநில வனத்துறையினரால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு தமிழகத்தை ஒட்டிய வனப்பகுதியில் விடப்பட்டது. அதன்பிறகு அரிக்கொம்பன் யானை தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் நுழைந்தது. இதனால் தமிழக வனத்துறையினர் யானையை பிடிக்க முயற்சி மேற்கொண்டனர். சுமார் ஒரு வாரத்திற்கும் மேலாக போராடி இன்று இரண்டு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் ,மேகமலை பகுயில் புகுந்து ஆட்டம் காட்டி வந்த யானையை கேரள வனத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி அரிசி கொம்பன் யானையை பிடிக்க முடிவு செய்தனர். சண்முகா நதி அணை பகுதியில் முகாமிட்டுள்ள யானை மேகமலை நோக்கி சென்றது. இதனை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது சின்னமனூர் அருகே பிடிபட்டுள்ளது.