• Mon. Oct 2nd, 2023

ஒடிசாவில் மீண்டும் ரயில் தடம் புரண்டது விபத்து

ByA.Tamilselvan

Jun 5, 2023

நாட்டையே உலுக்கிய ரயில் விபத்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஒடிசாவில் இன்று சரக்கு ரெயில் தடம் புரண்டது.
கோரமண்டல உள்பட 3 ரெயில்கள் விபத்துக்குள்ளாகி 275 பேர் பலி 1000 ஊழியர்கள் இரவு பகலாக வேலைப்பார்த்து சீரமைப்பு பணி முடிந்து தற்போது ரெயில் சேவை தொடக்கம்உள்ளதுஇந்நிலையில் மீண்டும் மிகப்பெரிய விபத்து நடைபெற்று 3 நாட்கள் முடிவடைவதற்குள் தற்போது ஒடிசாவில் மீண்டும் ஒரு விபத்து நடந்துள்ளது. ஒடிசா மாநிலம் டுங்ரி சுண்ணாம்பு சுரங்கத்திற்கும் ஏசிசி பார்கார் சிமெண்ட் ஆலைக்கும் இடையில் ரெயில் தண்டவாளம் உள்ளது. இதில் சென்ற சுண்ணாம்பு ஏற்றி சென்ற ரெயிலின் ஐந்து பெட்டிகள் தடம் புரண்டுள்ளது. இது முற்றிலும் தனிப்பட்ட ரெயில் பாதை. ரெயில் தண்டவாளம், பெட்டிகள், என்ஜின் அனைத்தும் தனிப்பட்டவை. ரெயில்வேயுடன் எந்த வகையிலும் இணைக்கப்படவில்லை எனத் தகவில் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *