• Thu. Apr 25th, 2024

பள்ளி மேலாண்மை குழு உருவாக்கம்!

தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையின் பேரில் தமிழகமெங்கும் அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு என்று பெயரில் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்க குழு அமைக்கப்பட உள்ளது.

பள்ளி மேலாண்மை குழுவின் முக்கியத்துவம் மற்றும் செயல்பாடுகள் பற்றி கூறுதல், குழந்தைகளின் உரிமைகள் பற்றி ஆழமான புரிதல் உருவாக்குதல், பள்ளி மேம்பாடு திட்டம் தயாரித்து பள்ளி வளர்ச்சிக்கு உதவுவது என்பதே மேலாண்மை குழுவின் நோக்கம் ஆகும்.

குழுவின் மொத்தம் 20 உறுப்பினர்கள் சேர்க்கப்பட வேண்டும். பள்ளி மாணவ/மாணவியர்களின் பெற்றோர் தலைவராகவும், சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டிய மாணவ, மாணவியரின் பெற்றோர் துணைத் தலைவராகவும், பள்ளி தலைமை ஆசிரியர் வழிகாட்டுபவராகவும் செயல்படுவர். மேலும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் 2 பேர் முன்னுரிமை பெண் சுய உதவிக் குழுவை சார்ந்தவர் (பெண்) கல்வியாளர் புரவலர், தன்னார்வ அமைப்பினர் ஓய்வு பெற்ற அலுவலர் என 20 பேர்கொண்ட குழுவினர் தேர்வு செய்யப்படவேண்டும்.

பள்ளிக் குழந்தைகளிடம் வாழ்வதற்கான உரிமை வளர்ச்சிக்கு உரிமை பாதுகாப்பு பெறுவதற்கான உரிமை மற்றும் பங்கேற்பு உரிமை குறித்து விளக்கப்பட வேண்டும். உயிர் வாழ்தல் சத்தான உணவு பெறுதல். பெயர் மற்றும் தேசிய அடையாளத்திற்கானவையே உயிர் வாழ உரிமையாகும் வளர்ச்சிக்கான உரிமை என்பது கல்வி பெறுவது சமூக பாதுகாப்பு மற்றும் ஓய்வு பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் பங்கேற்பதற்கான உரிமையாகும்.

சுரண்டல்கள், கொடுமைகள், மனித தன்மையற்ற முறையில் கீழ்த்தரமாக நடத்துதல் உயிர் வாழும் வரை உதாசீனம் செய்தல் அல்லது புறக்கணித்தல் ஆகியவற்றுக் கான பாதுகாப்பு மேலும் நெருக்கடி காலம், போர் உடல் ஊனமுற்ற . சமயங்களில் சிறப்பு பாதுகாப்பு என்பது. பாதுகாப்பு உரிமையாகும். பங்கேற்பு உரிமை என்பது குழந்தைகள் அபிப்ராயம், மதிப்பு எதையும் வெளிப்படுத்தாது. உரிமை தகவல் கோரி பெறும் உரிமை கருத்தில் எண்ணத்தில் மதநம்பிக்கைகளில் தேர்ந்தெடுத்து பின்பற்ற. வேண்டிய உரிமைகள் ஆகியனுகுறித்து குறித்து தெரிவிக்கவேண்டும்.

இன்று முதல் கூட்டமாக கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜின்னி இவாஞ்சலின் ஜோஸ் தலைமையில் கருத்தாளர்கள் தமிழாசிரியர் முத்துசாமி நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் மணிமாறன் ஆகியோர் மேலாண்மை குழுவிற்கான கடமைகள் குறித்து சிறப்பு வகுப்பு எடுத்தனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுனிகள் வசந்தி, பாக்கிய ஜோதி ஆகியோர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *