• Mon. Nov 11th, 2024

தமிழ் அறிஞர்களுக்கு உதவித் தொகை: ஆட்சியர்…

ByN.Ravi

Oct 9, 2024

மதுரை மாவட்டம், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற தமிழ்
அறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதாதெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி:
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பாகச்சீரிளமைத்திறம் கொண்ட
அன்னைத்தமிழுக்கு அருந்தொண்டாற்றிவரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகைவழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது.முதுமைக்காலத்திலும்
பொருள் வறுமை, தமிழ்த் தொண்டர்பெருமக்களைத் தாக்காவண்ணம் திங்கள்
தோறும் ரூ.3,500/-, மருத்துவப்படி ரூ.500/- என, நான்காயிரம்ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்பெறுகிறது. தமிழுக்காகத் தம் வாழ்நாளை ஈந்துவரும் பெருமக்களுக்கு
இந்த உதவித்தொகை வாழுங்காலமெல்லாம் தமிழ்த் திருப்பணியில் தொய்வின்றி ஈடுபடும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது.தகைமைமேல் தகைமையாக, அகவை முதிர்ந்த தமிழ்ச் சான்றோர் பெருமக்களுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப்
பயணச் சலுகையும் வழங்கப்படுகிறது. தமிழ் காத்த தகைமைக்காக உதவித் தொகை பெற்ற தமிழறிஞர் பெருமக்களின் மறைவுக்குப்பின்னர், அவரின் மரபுரிமையருக்கு, அவர்தம் வாழ்நாள் முழுவதும் ரூ.2,500/- மற்றும் மருத்துவப் படி ரூ.500/- என அத்திருத் தொண்டு தொடர்கிறது.தமிழாய்ந்ததமிழ்மகனின் தமிழரசு தமிழ்த் தொண்டர்களைக் காக்கும் இப்பணியில் இதுகாறும் 1,334 அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் பயனடைந்துள்ளனர். அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்குஉதவித்தொகை வழங்கும் இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் அகவைமுதிர்ந்த தமிழறிஞர் பெருமக்களிடமிருந்து 2024-2025-ஆம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

”மகளிர் உரிமைத் தொகை, சமூகநலப்பாதுகாப்பு உதவித்தொகை போன்ற தமிழ்நாடு அரசின் வேறு திட்டங்களின் வாயிலாக உதவித்தொகை அல்லது ஓய்வூதியம் பெற்று வரும் பயனாளிகள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க இயலாது.”
விண்ணப்பிக்கத் தகுதிகள்: 1) 01.01.2024-ஆம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். 2) ஆண்டு வருவாய் ரூ.72,000/-க்குள் இருக்க வேண்டும். (வட்டாட்சியர் அலுவலகத்தில் இணையவழியில் பெறப்பட்ட வருமானச் சான்று இணைக்கப்படவேண்டும்). 3) தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான விவரக் குறிப்பு, 4) தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான பரிந்துரைச் சான்று இரண்டு தமிழறிஞர்களிடமிருந்து பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். 5) ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் (ஸ்மார்ட் கார்டு), மரபுரிமையர் (கணவன் / மனைவி) இருப்பின் அவரது ஆதார் அட்டை நகல் இணைக்க வேண்டும்.
அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகைவழங்கும்திட்டத்தின் விண்ணப்பப் படிவத்தினை மண்டில / மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை/ உதவி இயக்குநர் அணுவலகத்திலேயே நேரடியாகப்பெற்றுக் கொள்ளலாம் அல்லது தமிழ்
வளர்ச்சித் துறையின் வலைத்தளத்தில் (www.tamilvalarchithuraitn.gov.in) கட்டணமில்லாமல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்படுபவருக்கு முன்னர் கூறியதுபோல், திங்கள்தோறும் உதவித்தொகையாக ரூ.3,500/- மருத்துவப்படி ரூ.500/- அவருடைய வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மதுரை உலகத் தமிழ்ச் சங்கவளாகத்தில் இயங்கி வரும்மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் 31.10.2024-க்குள் அளிக்க வேண்டுமெனவும், நேரடியாகத் தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அளிக்கப்பெறும் விண்ணப்பங்கள் எற்றுக் கொள்ளப்பட மாட்டா எனவும், தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *