ஏடிஎம்களில் பணம் எடுக்கும் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏடிஎம் பரிவர்த்தனைகளை மிகவும் பாதுகாப்பானதாக மாற்ற எஸ்பிஐ புதிய முயற்சியை எடுத்துள்ளது. எஸ்பிஐ ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க ஓ.டி.பி -ஐ உள்ளிட வேண்டும். இந்த புதிய விதியில் ஓ.டி.பி இல்லாமல் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாது. பணம் எடுக்கும் நேரத்தில், வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் போனில் ழுவுP பெறுவார்கள். அதன்படி அந்த ஓ.டி.பி- ஐ உள்ளிட்ட பிறகுதான் ஏ.டி.எம்-ல் இருந்து பணத்தை எடுக்க முடியும். இந்த தகவலை வங்கி ட்வீட் செய்துள்ளது.
இந்த தகவலை வங்கி ட்வீட் மூலம் தெரிவித்துள்ளது. அந்த ட்வீட்டில், எஸ்பிஐ ஏடிஎம்களில் பணப்பரிவர்த்தனை செய்வதற்கான எங்களின் ஓ.டி.பி அடிப்படையிலான பணத்தை திரும்பப் பெறும் முறை மோசடி செய்பவர்களுக்கு எதிரான தடுப்பூசியாகும். மோசடியிலிருந்து உங்களைப் பாதுகாப்பதே எங்களின் முதன்மையான முன்னுரிமையாக இருக்கும். ஓ.டி.பி அடிப்படையிலான பணத்தை திரும்பப் பெறும் முறை எவ்வாறு செயல்படும் என்பதை எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் அறிந்திருக்க வேண்டும்.
10,000 மற்றும் அதற்கு மேல் பணத்தை எடுக்கும் போது இந்த விதிகள் பொருந்தும். எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் ஓ.டி.பி மூலம் ஒவ்வொரு முறையும் தங்கள் ஏடிஎம்மில் இருந்து ரூ 10000 மற்றும் அதற்கு மேல் எடுக்க அனுமதிக்கும்.
எஸ்பிஐ ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க ஓ.டி.பி தேவைப்படும்.
இதற்கு உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓ.டி.பி அனுப்பப்படும்.
இந்த ஓ.டி.பி நான்கு இலக்க எண்ணாக இருக்கும், அது வாடிக்கையாளர் ஒரு முறை பரிவர்த்தனைக்கு பெறும்.
நீங்கள் எடுக்க விரும்பும் தொகையை உள்ளிட்டதும், ஏடிஎம் திரையில் ஓ.டி.பி – ஐ உள்ளிடுமாறு கேட்கப்படும்.
வங்கியில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட ஓ.டி.பி -ஐ பணம் எடுப்பதற்கு இந்தத் திரையில் உள்ளிட வேண்டும்.
இந்த செயல்முறை வாடிக்கையாளர்களை மோசடியில் இருந்து பாதுகாக்கும் வகையில் வங்கியால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.டி.பி இந்தியாவில் 71,705 BC அவுட்லெட்டுகளுடன் 22,224 கிளைகள் மற்றும் 63,906 ATM/CDM கொண்ட மிகப்பெரிய நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது. இணைய வங்கி மற்றும் மொபைல் வங்கியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தோராயமாக 91 மில்லியன் மற்றும் 20 மில்லியன் ஆகும்.